Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 08– 07 – 2023

மேஷம்: இன்று அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

ரிஷபம்: இன்று எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். இருந்து வந்த நீண்ட நாள் வேலைகளை முழுமூச்சுடன் முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

மிதுனம்: இன்று உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடும் போது கவனத்துடன் இருப்பது நல்லது. வாழ்க்கை தரம் உயரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எல்லாவற்றிலும் மனகவலை ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கடகம்: இன்று தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவு உண்டாகும். மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

சிம்மம்: இன்று தொழில் வியாபாரத்தில் கவனமாக இருப்பது லாபம் அதிகரிக்க செய்யும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கன்னி: இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

துலாம்: இன்று திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. அலைச்சலால் உடல் சோர்வு ஏற்படலாம். ஆன்மீக நாட்டம் மனதிற்கு நிம்மதியைத் தரும். குல தெய்வ தலங்களுக்கு சென்று வருவது மனதிற்கு அமைதியைத் தரும். கணவனின் உடல் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

விருச்சிகம்: இன்று உங்கள் வியாபாரத்தை சீரமைப்பதற்கு சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும்.காரிய அனுகூலம் உண்டாகும். சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும். உடனிருப்பவருகள் உங்களுக்கு உதவுவார்கள். லாபம் அதிகரிக்கும். விற்பனை அமோகமாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

தனுசு: இன்று சொந்தங்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பரிகள் மற்றும் அருகிலிருப்பவர்களின் உதவியால் தொழில் முன்னேற்றம் உண்டாகும். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப்பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மகரம்: இன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நிறைவான ஆதரவு தருவார்கள். மன நிம்மதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கும்பம்: இன்று உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மீனம்: இன்று புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

 

admin

Recent Posts

O Kadhale Song

O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…

3 hours ago

பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள்..!

பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

6 hours ago

சென்னையில் ப்ரோவோக் ஆர்ட் பெஸ்டிவல் – நவம்பர் 1, 2 அன்று இசைக்கல்லூரியில் கலைவிழா

பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…

6 hours ago

பார்வதி சொன்ன விஷயம், வாட்டர் மெலன் கொடுத்த பதில் வெளியான இரண்டாவது ப்ரோமோ

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

11 hours ago

டியூட்: 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…

11 hours ago

ஒன்று சேர்ந்த சீதா,மீனா.. முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…

12 hours ago