Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 07 – 03 – 2022

மேஷம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப்பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 1, 3, 5, 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

ரிஷபம்: இன்று புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது.
அதிர்ஷ்ட எண்: 2, 5, 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

மிதுனம்: இன்று மனக்கவலை உண்டாகும். எதிர் பாராத செலவு ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும். குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட எண்: 1, 3, 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

கடகம்: இன்று பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனகவலை ஏற்படலாம். பிரயாணத்தில் தடங்கலை ஏற்படுத்தும். திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 3, 6, 9
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

சிம்மம்: இன்று வீண் வாக்குவாதங்களை ஏற்படும். எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய வேண்டி இருக்கும். இதனால் வாகன லாபம் ஏற்படும். எதிர் பார்த்த பணம் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும்.
அதிர்ஷ்ட எண்: 1, 3, 5, 9
அதிர்ஷ்ட நிறம்: ரஞ்சு, ஊதா, மஞ்சள்

கன்னி: இன்று மனதை அரித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தில் முக்கியமான முடிவை எடுப்பீர்கள். உங்களின் நிதானமான போக்கு பெரிய முன்னேற்றத்திற்கு வழியைத் தேடித் தரும். புதிய வாய்ப்புகள் நல்ல வருமானத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நீடிக்கும்.
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

துலாம்: இன்று அறிமுக இல்லாதவர்களிடம் வரவு, செலவு வைத்துக் கொள்ள வேண்டாம். பழைய பாக்கி வசூல் ஆகும். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. வேறு பல உபதொழில்களும் இந்த நேரத்தில் ஆரம்பிக்கலாம். உடன்பிறந்தவர்களால் உதவிகள் வந்து சேரும். முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 3, 6, 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

விருச்சிகம்: இன்று குடும்பத்தினரிடம் உங்களின் மதிப்பு உயரும். விருந்து, கேளிக்கைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபார விருத்திக்குண்டான முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியைத் தேடித் தரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக் கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கைகொடுக்கும்.
அதிர்ஷ்ட எண்: 6, 9
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

தனுசு: இன்று தடைகள் தகரும். எதிலும் நிதானத்தைக் கடைப்பிடித்து காரியங்களை கடை பிடித்து சாதித்து கொள்வீர்கள். உங்களுடைய சாதுர்யம் வெளிப்படும். அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். உங்களுடைய தாய்மாமனுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும்.
அதிர்ஷ்ட எண்: 2, 7
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

மகரம்: இன்று உங்களை பார்த்தவுடன் அனைவரையும் முக வசீகரத்தால் கவர்ந்திழுப்பீர்கள். உங்கள் செயல்களில் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தால் புதிய கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்வீர்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் நண்பர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். பொதுநலத் தொண்டுகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 3, 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

கும்பம்: இன்று குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உங்கள் விருப்பங்களும் தேவைகளும் பூர்த்தியாகும். முக்கியமான விஷயங்களில் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள், அறிவுரைகளை கேட்டு முடிவெடுப்பீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் தவறுகளை உடனடியாகச் சுட்டிக் காட்டி திருத்துவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

மீனம்: இன்று சுதந்திரமாக பணியாற்றி வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். கடுமையாக உழைத்து பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். முடங்கிய செயல்களை மீண்டும் செய்ய முனைவீர்கள். தடைகளை தகர்த்தெறிந்து முன்னேறுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 4, 6
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

admin

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

7 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

7 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

7 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

1 week ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

1 week ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

1 week ago