Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் – 06– 12 – 2023

மேஷம்: இன்று குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். புதிய சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றலைப் பெறுவீர்கள். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

ரிஷபம்: இன்று முயற்சிகளில் தடை தாமதங்களைச் சந்திக்க நேரிடும் என்றாலும் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். கணவன்-மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்-உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு திருப்தியளிக்கும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 9, 3

மிதுனம்: இன்று பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின்பே அனுகூலப்பலனை அடைவீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருந்தாலும் பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

கடகம்: இன்று பெண்களுக்கு தடைபட்ட காரியங் களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும்.பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறைந்து மனநிம்மதி உண்டாகும். அலைச்சல், டென்ஷன்கள் மறையும். பூர்வீக சொத்துவழியில் லாபங்கள் உண்டாகும். சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் ஏற்படும்.
அதிர்ஷ்டநிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

சிம்மம்: இன்று கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எந்தவித போட்டிகளையும் சமாளித்து முன்னேற்ற மடையக்கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவுசெய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கன்னி: இன்று உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகி உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு களால் வேலைப்பளு குறையும். சகோதரர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
அதிர்ஷ்டநிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

துலாம்: இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாக சரியாகிவிடும். தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளால் உடல்நிலை சோர்வடையும் என்றாலும் அதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலமான பலனையும் அடையமுடியும்.
அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

விருச்சிகம்: இன்று மனைவி, பிள்ளைகளாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகளை எதிர் கொள்வீர்கள். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களை அனுசரித்துச்செல்வதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலமான பலனை அடைவீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டநிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

தனுசு: இன்று திருமண சுபகாரிய முயற்சிகளை மேற்கொள்வதை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. புத்திரர்களால் சில மனசஞ்சலங்கள் தோன்றினாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. பொருளாதார நிலை திருப்திகரமாகவே இருக்கும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொண்டால் சேமிக்கமுடியும்.
அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மகரம்: இன்று கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் ஓரளவுக்கு சிறப்பான லாபத்தைப் பெறமுடியும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். கவலை நீங்கும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்: இன்று வம்பு வழக்குகளில் இழுபறியான நிலையே நீடிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும். உற்பத்தியிலும் விற்பனையிலும் அதிக முயற்சிகளை மேற்கொண்டால் எந்த போட்டி பொறாமைகளையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் உண்டாகும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மீனம்: இன்று சுபவிரைய செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். வெளியூர், வெளிநாடு களிலிருந்தும் ஆர்டர்கள் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பும், கூட்டாளிகளின் ஆதரவும் மனமகிழ்ச்சியை உண்டாக்கிவிடும். வாங்கிய வங்கிக்கடன்களையும் அடைத்துவிடுவீர்கள்.
அதிர்ஷ்டநிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

 

admin

Recent Posts

Oru Paarvai Paarthavanae video song

Oru Paarvai Paarthavanae - Video Song | OTHERS | Aditya Madhavan, Gouri | Abin Hariharan…

9 hours ago

பெர்சிமன் பழத்தில் இருக்கும் நன்மைகள்..!

பெர்சிமன் படத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. இந்த…

14 hours ago

Indian Penal Law (IPL) Official Teaser

Indian Penal Law (IPL) - Official Teaser | TTF Vasan | Kishore | Kushitha |…

14 hours ago

பைசன்: 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…

14 hours ago

டியூட்: 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.??

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…

14 hours ago