விஜயாவிடம் சண்டை போட்ட முத்து. அதிர்ச்சியில் விஜயா.இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் விஜயா மீனாவின் ரூமுக்கு வந்து சீக்கிரம் ரூமை சுத்தம் பண்ணிட்டு வெளியே வந்துவிடு, அவங்களுக்கு இன்னைக்கு சாந்தி முகூர்த்ததுக்கு ஏற்பாடு பண்ணனும் என்று சொல்ல மீனா இந்த ரூமை அவங்களுக்கு கொடுத்துட்டா நாங்க என்ன பண்றது என கேட்கிறார்.

அவர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கிறேன் என்று போனை எடுக்க அவன்கிட்ட இப்ப சொல்ல வேணாம் வந்ததும் சொல்லி அவன சம்மதிக்க வை இரண்டு மூணு நாளைக்கு தான் அவங்களுக்கு நல்லது நடக்கணும் இல்ல, இந்த வீட்டுக்கு முதல்ல வந்த மருமக நீ தான் நீ தான் பொறுப்பான நடந்துக்கணும் என்று சொல்லி ஒரு வழியாக மீனாவை சம்மதிக்க வைக்கிறார்.

பிறகு வீட்டுக்கு வந்த முத்து மீனாவிடம் உப்புமா மற்றும் பிளாக் டீ கேட்டுவிட்டு ரூமுக்கு செல்ல முதலிரவு காண ஏற்பாடுகளை பார்த்து முத்து தனக்காக மீனா செய்தது என நினைத்து மீனா விடம் நெருங்க மீனா இது நமக்காக செய்தது கிடையாது, ரவி, ஸ்ருதி முதலிரவுக்காக செய்த ஏற்பாடு என்று சொல்ல கோபப்படுகிறார்.

அவங்களுக்கு எதுக்கு நம்ம ரூம் கொடுக்கணும் என்று கேட்க அப்பதான் கேட்டாங்க என்று சொல்ல முத்து விஜயாவிடம் சண்டைக்கு வருகிறார். பிறகு மீனா முத்துவை கூட்டிச்சென்றும் ஒரு வழியாக சமாதானப்படுத்த அவர் எனக்கு மொட்டமாடி இருக்கு உனக்கு கீழே ஒரு வராண்டா இருக்குல அதுதான் உன்ன நல்லா ஏமாத்துறாங்க என்று திட்டி விட்டு செல்கிறார்.

பிறகு ஸ்ருதி மற்றும் ரவி வீட்டுக்கு வர விஜயா முத்து ரூமில் தங்கிக்க சொல்கிறார். பிறகு ஸ்ருதியிடம் உங்களுக்கு இன்னைக்கு சடங்கு சம்பாதிக்கலாம் இருக்கு என்று சொல்ல தான் காலையிலேயே முடிஞ்சிடுச்சே அப்புறம் என்ன என கேட்கிறார்.

முதலிரவு என்பதை எப்படி எப்படியோ சுற்றி வளைத்து சொல்ல முயற்சி செய்ய அதை சுருதி புரிந்து கொள்ளாமல் இருக்க பிறகு சாந்தி முகூர்த்தம் என்று சொல்ல அதுவும் புரியாமல் இருக்கிறது.

பிறகு ரோகிணி உங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடு பண்ணி இருக்காங்க என்று சொல்ல அதுதான் ஏற்கனவே நடந்து முடிஞ்சிடுச்சு என்று விஜயாவுக்கு ஷாக் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் சுருதி இது எத்தனாவது நைட் என்று எண்ணி சொல்ல ரோகிணி விஜயாவிடம் ஃபர்ஸ்ட் நைட் கல்யாணத்துக்கு முன்னாடியே முடிந்ததோ இல்ல பின்னாடி முடிஞ்சதோ என நக்கல் அடிக்கிறார். என் புள்ள அப்படியெல்லாம் கிடையாது என்ற விஜய் சொல்ல அதான் பார்த்தோமே எத்தனை தடவை எண்ணிட்டு இருக்காளே என்று ஷாக் கொடுக்கிறார்.

Baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

‘டாக்ஸிக்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல் – ரூ.200 கோடியிலிருந்து ரூ.30 கோடியாக குறைந்த ஓடிடி மதிப்பு?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…

19 hours ago

‘பில்லா-2’ படத்தை இயக்காதது ஏன்? முதன்முறையாக மனம் திறந்த இயக்குநர் விஷ்ணு வர்தன்!

அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…

20 hours ago

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் சீமான்!

‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…

20 hours ago

‘ஏஜிஎஸ் 29’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – ஆக்‌ஷன் திரில்லருடன் காமெடி கலந்த புதிய படம்!

‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…

20 hours ago

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் தனுஷ்!

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…

20 hours ago

Enna Vilai Official Trailer

Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor

2 days ago