Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 06– 07 – 2022

மேஷம்: இன்று தன்னை நம்பியவர்களை எத்தகைய துன்பத்திலிருந்தும் காப்பாற்றுவீர்கள் .தடைப்பட்ட சுபகாரியங்கள் சிறப்பாகக் கைகூடும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகள் தாராளமாக அமைவதால் கடன் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

ரிஷபம்: இன்று சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். விரோதம் பாராட்டிய உற்றார்- உறவினர்கள் மற்றும் நண்பர்களும் நட்புக்கரம் நீட்டுவார்கள். கொடுக்கல்-வாங்கல் சரளநிலையில் நடைபெறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

மிதுனம்: இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்களும் லாபங்களும் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகமான பலனைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறமைக்கேற்ற உயர்வுகளைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

கடகம்: இன்று வெளியூர், வெளிநாடுகளுக்குச்சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு திருப்தி அளிப்பதாக அமையும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகக்கூடும். உணவு விஷயத்திலும் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வதன்மூலம் தேவையற்ற மருத்துவச் செலவுகளைக் குறைத்துக்கொள்ளலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

சிம்மம்: இன்று அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். தொழில், உத்தியோக ரீதியாக சிறுசிறு இடையூறுகளைச் சந்திக்க நேரிட்டாலும் அடையவேண்டிய பொருளாதார மேன்மையை அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கன்னி: இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பதால் மருத்துவச்செலவுகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெற்று மனநிம்மதியை உண்டாக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

துலாம்: இன்று தொலை தூரப்பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் இருந்தாலும் அதன்மூலம் அனுகூலப்பலனை அடைவீர்கள். குடும்பத்தில் கணவன் -மனைவியிடையே ஒற்றுமை நிலவும். கடந்தகால மருத்துவச் செலவுகள் படிப்படியாகக் குறையும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் அற்புதமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

விருச்சிகம்: இன்று வெளியூர்களிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்திகள் அனுகூலத்தை உண்டாக்கும். பொருளாதாரநிலையும் சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வதும் உத்தமம். அசையாச் சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

தனுசு: இன்று நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தமுடியும். பழைய தொகையும் தடையின்றி வசூலாகும். வம்பு வழக்குகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். எடுக்கும் காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடித்து மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மகரம்: இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகளும் விலகி நல்ல முன்னேற்றமும் அபிவிருத்தியும் பெருகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். கூட்டுத்தொழிலிலும் கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தொழிலை விரிவுசெய்யும் நோக்கம் நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்: இன்று வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும். உங்கள் திறமைக்கான பாராட்டுதல்களும் கிட்டும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயரை எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மீனம்: இன்று சிலருக்கு வேண்டிய இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். கடந்தகால அலைச்சல், டென்ஷன்கள் குறைந்து பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சேமிப்பு பெருகும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றமிகு பலன்களைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

 

 

admin

Recent Posts

கையில் வழங்கப்பட்ட சான்றிதழ்… நினைத்ததை செய்துமுடித்த பார்த்திபன்..!

தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் திகழும் பார்த்திபன், தனது சிந்தனைகளாலும் செயல்களாலும் அடிக்கடி கவனம் ஈர்த்துவருபவர்.…

2 hours ago

‘என்னைக்கும் குறையாத மவுசு’ – 10 கோடி பார்வைகளை கடந்த ‘கூலி’ பவர்ஹவுஸ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில்…

2 hours ago

‘TN 2026’ – நாளை OTT-யில் வெளியீடு!

2026 தமிழ்நாடு தேர்தல் களத்தை பின்னணியாகக் கொண்டு உருவான நகைச்சுவை திரைப்படம் ‘டிஎன் 2026’. இந்த படம் கடந்த 14-ம்…

2 hours ago

‘மனிதன் தெய்வமாகலாம்’ – OTT வெளியீட்டு அப்டேட்!

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், நடிகர் செல்வராகவன் நடித்துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படம் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. விஜயா சதீஷ்…

2 hours ago

மோகன்லாலின் ‘த்ரிஷ்யம்-3’ – இன்று மாலை வெளியாகிறது டீசர்!

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. அதன் வெற்றியைத் தொடர்ந்து…

3 hours ago

Polladha Aasaigal Lyric Video

Polladha Aasaigal Lyric Video | 29 | Sean Roldan | Vidhu, Preethi Asrani | Rathna…

1 day ago