Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 06– 02 – 2023

மேஷம்: இன்று காரிய தடை, தாமதம் உண்டாகலாம். திடீர் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பணதேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2, 9

ரிஷபம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். பெண்கள் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது. சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3

மிதுனம்: இன்று கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும். மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்ப்புகள் குறையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 7

கடகம்: இன்று மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால் நல்ல பலனை தரும். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

சிம்மம்: இன்று வீண்செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கன்னி: இன்று தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

துலாம்: இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய வாரமாக அமையும். சக பணியாளார்கள் உங்களுக்கு தொல்லை தருவதாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

விருச்சிகம்: இன்று மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

தனுசு: இன்று காரியதடை, வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பெண்கள் அடுத்தவர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது சிறந்தது. அலுவலகத்தில் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் பொறுமையை கடைப்பிடித்து வெற்றி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

மகரம்: இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். நீங்கள் பொறுமையைக் கடைபிடித்தால் அனைத்து காரியங்களிலும் வெற்றிதான்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்: இன்று புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். பெண்கள் சிறிய அளவில் நன்மையையும், பொறுமையையும் பெறக்கூடிய கால கட்டம், வேண்டிய அளவில்கிடைக்காவிட்டாலும் ஒரு சிறிய சன்மானம் உங்களுக்கு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மீனம்: இன்று திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணபுழக்கம் திருப்தி தரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மாணவர்கள் உணர்ச்சிவசப்பட்டு யாரிடமும் எந்த ரகசியத்தையும் சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் தொல்லை தலைதூக்கலாம். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

 

 

admin

Recent Posts

RANABAALI Teaser

RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan

22 hours ago

Magale Music Video

Magale Music Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

22 hours ago

இளையதிலகம் பிரபு நடிக்கும் ‘அழகிய லைலா’ படப்பிடிப்பு தொடங்கியது!

ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…

22 hours ago

மதுரையில் ‘சேயோன்’ படப்பிடிப்பு: ரசிகர்களுக்கு ஜிகர்தண்டா வாங்கிக் கொடுத்த சிவகார்த்திகேயன்!

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…

22 hours ago

இந்தி தேசிய மொழியா? சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்புக் கோரிய சிவராஜ் குமார்!

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…

23 hours ago

தீபாவளி ரிலீஸ்: சூர்யாவின் 47வது படத்திற்கு ‘SCENE’ என தலைப்பு வைப்பு!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…

23 hours ago