Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் – 03– 08 – 2023

மேஷம்: இன்று திறமையுடன் காரியங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். அரசின் ஆதரவு நிலைப்பாடுகள் உங்கள் எண்ணத்திற்கும் செயலுக்கும் புதிய உத்வேகம் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

ரிஷபம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மிதுனம்: இன்று தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கடகம்: இன்று மனமகிழ்ச்சி உண்டா கும். குடும்ப பிரச்சனை தீரும். நேரத்திற்கு ஏற்றாற்போல் குணத்தை மாற்றிக்கொண்டு சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும். பெண்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

சிம்மம்: இன்று வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த கவனம் செலுத்தி முதல்தர மாணவராக தேர்ச்சி பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கன்னி: இன்று எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம். சக மாணவர்களின் பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு உதவும் வழியில் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

துலாம்: இன்று கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

விருச்சிகம்: இன்று நீங்கள் பிடிவாத குணத்தை தளர்த்திக் கொண்டால் எதிலும் முன்னேற்றம் காண முடியும். மனோ தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம். உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

தனுசு: இன்று உயர்வு, தாழ்வு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிப்பதே குறிக்கோளாக செயல்படுவீர்கள். பணவரத்து இருக்கும். மனகவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்: இன்று சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கும்பம்: இன்று புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மீனம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள். உங்கள் செயல்திறனால் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

 

admin

Recent Posts

ஜன நாயகன் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…

18 hours ago

Rasagulla Video Song

Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…

21 hours ago

Thadumaarudhe Video Song

Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…

2 days ago

‘டாக்ஸிக்’ படத்தின் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு – யஷ், தாரா சுதாரியாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது!

'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…

2 days ago

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’ – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!

செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…

2 days ago

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…

2 days ago