கோபிக்கு பாக்கியா கொடுத்த அதிர்ச்சி. புலம்பிய கோபி.இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பழனிச்சாமியை பாக்யாவிடம் பிரபோஸ் செய்ய சொல்லி ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் டாஸ்க் கொடுக்க லோபிதா ஸ்டார்ட் பண்ணுங்க சார் என்று சொல்ல பழனிச்சாமி பாக்கியாவிடம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, நீங்க ஒரு ஸ்டார்.. படிக்கிறீங்க, பிசினஸ் பாக்குறீங்க, ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் வரிங்க, எல்லாத்துலையும் சாதிக்கிறீங்க என்று அவரை பாராட்டி கடைசியில் ஐ லவ் யூ என்று சொல்கிறார்.

பாக்கியாவை சந்திக்க வந்த கோபி இதையெல்லாம் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பிறகு வெளியே சென்று காத்துக் கொண்டிருக்கிறார். இங்கே பழனிச்சாமி கிளாஸ் முடிந்து பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்க பாக்யா எல்லாம் லோபிதாவால் வந்தது என்று திட்டுகிறார். அதன் பிறகு பழனிச்சாமி கிளம்பி வெளியே வர கோபி நின்று கொண்டிருப்பதை பார்க்கிறார்.

கோபினா என்ன அண்ணா இங்க? வாங்க ஜூஸ் சாப்பிடலாம் என்று கூப்பிட கோபி எனக்கு அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், இவ்வளவு பெருசா வளர்ந்து இருக்கீங்க உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா? நான் பாக்கியா கூட பேசாதீங்கன்னு எத்தன முறை சொல்லி இருக்கேன் ஆனா நீங்க அத்தனை பேர் முன்னாடி வெச்சு ப்ரொபோஸ் பண்ணிட்டு இருக்கீங்க , உங்களுக்கு ஊர்ல வேற பொண்ணு கிடைக்கலையா என் பொண்டாட்டி நான் கிடைச்சாளா என்று சொல்ல வந்து பிறகு அந்த பாக்கியா தான் கிடைச்சாளா என்று கோபப்படுகிறார்.

பழனிச்சாமி அது ஒரு டாஸ்க் என்று சொல்லியும் கோபி நம்ப மறுத்து கோபப்படுகிறார். இனிமேலும் என் ரூட்ல கிராஸ் பண்ணாதீங்க அப்புறம் பின் விளைவுகள் பயங்கரமா இருக்கும் என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார்.

அடுத்ததாக பாக்யா ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸில் இருந்து வெளியே வந்து ஸ்கூட்டியில் கிளம்பும்போது எதிரில் கோபி காரை கொண்டு வந்து நிறுத்தி ஷாக் கொடுக்கிறார். இந்த வயசுல உனக்கு இதெல்லாம் தேவையா? வளர்ந்த பொண்ண வச்சுகிட்டு எவன் கூடயோ திரிஞ்சிட்டு இருக்க, அசிங்கமா இல்லையா என பாக்யாவை ரோட்டில் வைத்து அவமானப்படுத்தி பேச அதற்கு எல்லாத்துக்கும் பாக்யா பதிலடி கொடுக்கிறார்.

இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட அனைவரும் கூடி நின்று வேடிக்கை பார்க்கின்றனர். பழனிச்சாமி மற்றும் லோபிதா என இருவரும் காரில் வந்து கொண்டிருக்கும் போது சண்டையை பார்த்து நிறுத்தி அவர்களும் வேடிக்கை பார்க்கின்றனர்.

கோபி தொடர்ந்து அவமானப்படுத்தி பேச பாக்கியா அதற்கெல்லாம் பதிலடி கொடுத்து பேச இனியும் வேடிக்கை பார்க்க முடியாது என பழனிசாமி சண்டையை தடுக்க வரும் போது போலீஸ் வந்து நிற்க கோபி அதிர்ச்சி அடைகிறார்.

என்ன இங்க பிரச்சனை எதுக்காக சத்தம் போட்டுகிட்டு இருக்கீங்க என்று கேட்க கோபி சண்டை எல்லாம் போடல குடும்ப பிரச்சினை சும்மா பேசிட்டு இருந்தோம் என்று சொல்ல பாக்கியா சண்டை தான் போட்டுக்கிட்டு இருந்தாரு என அதிர்ச்சி கொடுக்கிறார்.

மேலும் கோபி இல்ல அவங்க புரியாம பேசுறாங்க, என்னுடைய வைஃப் தான் என்று சொல்ல பாக்கியா யாருக்கு யார் வைப்? இவரு யாருன்னு எனக்கு தெரியாது நான் முன்ன பின்ன பார்த்ததே கிடையாது என பாக்யா கோபியை கோர்த்து விடுகிறார். இதனால் கோபி போலீஸிடம் வசமாக சிக்கிக் கொள்ள அவர்கள் நீங்க போங்க மேடம் என பாக்கியாவை அனுப்பி வைக்கின்றனர்.

திரும்பவும் வந்து இந்த மாதிரி சண்டை போட வேண்டாம் என்று வார்ன் பண்ணி அனுப்புங்க சார் என்று சொல்லிவிட்டு பாக்கியா கிளம்புகிறார். பிறகு கோபியை எச்சரிக்கும் போலீஸ் அந்த மேடம் கிட்ட இனி எந்த பிரச்சினையும் வச்சிக்க கூடாது, உங்க வீட்டு அட்ரஸையும் போன் நம்பரையும் எழுதிக் கொடுத்துட்டு போங்க என எழுதி வாங்கி கொண்டு கோபியை எச்சரித்து அனுப்புகின்றனர்.

யாருன்னே தெரியாதுன்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டா என கோபி ரோட்டில் நின்று புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Episode Update
jothika lakshu

Recent Posts

Beep Tamil Trailer

Beep Tamil Trailer | Raaghav, Yamini, Prerna, Priya, Nithish | Crime Drama | Mind Bending…

1 hour ago

Arugey Arugey Lyrical Video

Arugey Arugey Lyrical Video | I'm Game | Dulquer Salmaan, Kayadu Lohar | Armaan Malik,…

1 hour ago

டி.சி திரைப்பட விமர்சனம்

தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…

1 day ago

டேர் டெவில் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ரூ.180 கோடி வியாபாரமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…

1 day ago

இளம் கிரிக்கெட் வீரருடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாகூர்!

‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…

1 day ago

சம்பளம் மட்டுமல்ல… செல்வாக்கிலும் கெத்து! இந்தியாவின் டாப் 10 நடிகைகள்!

திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…

1 day ago