மேஷம்: இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும் எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
ரிஷபம்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
மிதுனம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் நெருக்கம் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
கடகம்: இன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடவுள் பக்தி அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
சிம்மம்: இன்று வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
கன்னி : இன்று கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7
துலாம்: இன்று கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
விருச்சிகம்: இன்று எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
தனுசு: இன்று எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிற்று கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
மகரம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
கும்பம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தின ருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
மீனம்: இன்று பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. திறமையாக செயல்பட்டு காரிய வெற்றிகாண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மனோதைரியம் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…