Title for Vijay's 'Thalapathy 65'
நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. கொரோனா 2-வது அலை குறைந்த பின் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
இந்நிலையில், விஜய்யின் 65-வது படத்துக்கு ‘டார்கெட்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் படக்குழுவினர் டார்கெட் தலைப்பு உண்மைதானா என்பதை உறுதிப்படுத்தவில்லை. விஜய்யின் பிறந்த நாளையொட்டி வருகிற 22-ந் தேதி படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Hello Kadhal Trailer | Arya | Nikhila Vimal | Vaishnavi Chaitanya | Nikhil Muraly |…
Aathi Ennale Mudiyalaye Lyrical Video | Irandu Vaanam | Vishnu Vishal | Mamitha Baiju |…
NELLAI BOYS Official Teaser | Arivazhagan , Hema Rajkumar, Velaramamoorthy | Kamalkumar G
தமிழ் உள்ளிட்ட தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். தனது திரைப்பயணத்தின் தொடக்க காலத்தில் எதிர்கொண்ட…
ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுகளுக்கு இணையாகக் கருதப்படும் முக்கியமான விருதுகளில் எம்மி விருதுகளும் ஒன்றாகும். கடந்த 1949-ம் ஆண்டு ஜனவரி 25-ம்…
கேரளாவைச் சேர்ந்த திருநங்கை நடிகை, மாடல் மற்றும் நடனக் கலைஞரான தீப்தி கல்யாணி, தனது தனித்துவமான தோற்றம் மற்றும் கலைத்திறமையால்…