வயிற்றில் இரைச்சல் இருந்தால், கொதிக்கும் நீரில் கொஞ்சம் ஓமம் போட்டு மூடி வையுங்கள். சிறிது நேரம் கழித்து வடிகட்டி பாலையும் சர்க்கரையும் சேர்த்து சாப்பிடுங்கள். வயிற்று இரைச்சல் நின்றுவிடும்.
கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு டீஸ்பூன் அளவிற்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க குடற்பூச்சிகள் முழுவதும் அன்றே வெளிவந்துவிடும். இதற்கு கடும் பத்தியம் கிடையாது. குழந்தைகளின் வயதிற்கேற்ப அளவைக் கூட்டியோ, குறைத்தோ கொடுக்கலாம்.
முகப்பரு வருவது இயற்கை, அதனால் ஏற்படும் தழும்புகளும் இயற்கை. அது என்னதான் மேக்-அப் போட்டாலும் போகாத தழும்புகள் என்பது ஏறக்குறைய மருத்துவ உண்மை. ஆனால் சில இயற்கை வழிமுறைகள் உள்ளன.
வெந்தயம் முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளை ஒழித்துக் கட்ட சிறந்த மருந்தாகும். வெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல நீவி தடவவேண்டும்.
அல்லது வெந்தய விதைகளை நன்றாக கொதிக்கவிட்டு, பிறகு அரைத்து கூலான இடத்தில் வைக்கவும். இதனை தழும்புகள் மீது தடவி 15 அல்லது 20 நிமிடம் உலர விடவும். பிறகு ஜில் தண்ணீரில் முகத்தை அலம்பவும்.
எலுமிச்சை சாறை எடுத்துக்கொள்ளவும், பஞ்சை அதில் நனைத்து பருக்கள் தழும்புகள் மீது தடவவும். சிறிது நேரம் கழித்து மிதமான கொதிநீரில் முகத்தை அலம்பவும். எலுமிச்சை கரும்புள்ளிகளை போக்கவும் சிறந்த மருந்தாகும்.
சந்தனம் மற்றும் பன்னீரைக் கலந்து பேஸ்ட் போன்று செய்து முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளலாம். ஒரு மணிநேரம் கழித்து பிறகு அலம்பவும்.
ஆலிவ் எண்ணெய்யை ரெகுலராக முகத்தில் தடவி வந்தால் ஏற்கனவே உள்ள பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் உருவக்கத்தையே தடுத்தாலும் தடுத்து விடும்.
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…