Thittam Irandu to release 30 July
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘திட்டம் இரண்டு’. ‘யுவர்ஸ் சேம்புல்லி’ என்ற குறும்படத்தின் மூலம் பிரபலமான விக்னேஷ் கார்த்திக் இப்படத்தை இயக்கி உள்ளார். திடுக்கிடும் மர்மங்கள் நிறைந்த திகில் படமாக இது உருவாகி உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், ‘திட்டம் இரண்டு’ படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்ட படக்குழு, இதுதொடர்பாக முன்னணி ஓடிடி தளங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இறுதியாக இப்படத்தின் ஓடிடி உரிமையை சோனி லிவ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தை வருகிற ஜூலை 30-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘க/பெ.ரணசிங்கம்’ திரைப்படம் கடந்தாண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன் இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிருஷ்க்கு டெஸ்ட்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…