என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை பைல்ஸ் முதல் பக்கம்’, ‘வா வாத்தியார்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். தனது இயல்பான நடிப்பாலும், கவர்ச்சியான திரை தோற்றத்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஷில்பா மஞ்சுநாத், அடிக்கடி புகைப்படங்கள் பகிர்ந்து இளைய தலைமுறையின் கவனத்தை கவர்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் பகிர்ந்த தகவல் வைரலாகி வருகிறது. அதில், தனது ஆண் ரசிகர்கள் அவரை பாராட்டுவதால் அவர்களுக்கே சிக்கல்கள் உருவாகின்றன என சிரிப்புடன் கூறியுள்ளார்.

“என் அழகைப் பார்த்து சில ரசிகர்கள், ‘இவர் என் முன்னாள் காதலி மாதிரி இருக்கிறார்’ என்று அவர்களின் மனைவி, காதலி அல்லது தோழிகளிடம் சொல்லி புகழ்கிறார்கள். ஆனால் அதுவே அவர்களுக்கு பிரச்சினையாகி விடுகிறது. சமீபத்தில் என்னை சந்தித்த ஒரு ரசிகர் கூட, அவரது மனைவி என்னை மிகவும் வெறுப்பதாக சொன்னார். அவர் என்னை இன்ஸ்டாகிராமில் ‘பாலோ’ செய்தவுடன், உடனே அவரது மனைவி அதை ‘அன்போலோ’ செய்து விடுகிறாராம்,” என்று பகிர்ந்தார்.

இதனை சிரிப்புடன் பகிர்ந்த அவர், “இது ஆச்சரியமாக இருந்தாலும், ரசிகர்களின் மனதில் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றும் கூறினார்.

Suresh

Recent Posts

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

23 hours ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

2 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

2 days ago

Kaalidas 2 – Trailer

https://youtu.be/zH2MZU2fc-w?si=CSjG9SR-G3LKHDNg

2 days ago

Naanga Naalu Peru Lyric Video

Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…

2 days ago

BIKER Trailer (Tamil)

https://youtu.be/0xHjwlnRGT4?si=WGpGwJhCCJQ1Rr9_

2 days ago