‘தலைவர் ரஜினியின்’-173 பட தாமதத்திற்கு காரணம் இதுதான்!

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கவிருக்கும் ‘தலைவர்-173’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்..

பார்க்கிங்” படம் மூலம் தேசிய விருது பெற்று கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இவர், டான் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து NOC-க்காக தற்போது காத்துக்கொண்டு இருக்கிறார். ஏனென்றால், அவர் இதற்கு முன்பு சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. அப்படத்தை டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கவிருந்தார். சில காரணங்களால் அப்படம் துவங்க தாமதமானதால் ராம்குமார் பாலகிருஷ்ணன் தற்போது ரஜினி நடிப்பில் படமெடுக்க தயாராகி வருகிறார்.

எனவே, தன் அடுத்த படத்தை துவங்க ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு டான் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து NOC தேவைப்படுகிறது. அவர்களிடமிருந்து முறையான அனுமதி பெற்ற பிறகு அதிகாரபூர்வமாக ரஜினியின் ‘தலைவர்-173’ படத்தில் கமிட்டாக உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த NOC வந்த பிறகு ‘தலைவர்- 173’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அந்த NOC கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு ரஜினியின் பிறந்த நாளில் ‘தலைவர்-173’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

இந்நிலையில், ராம்குமார் பாலகிருஷ்ணன் ரஜினியிடம் ஒரு பீல் குட் கமர்ஷியல் கதையை கூறியிருக்கிறார். பீல் குட் கமர்ஷியல் கதையாக இருந்தாலும் வித்தியாசமான பாணியில் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஒரு கதையை ரஜினியுடன் சொன்னதாக தெரிகிறது. அந்த கதையை கேட்ட ரஜினிக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

dinesh kumar

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

24 hours ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

24 hours ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

1 day ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

2 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

2 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

2 days ago