திரையரங்குகள் அதிகரிப்பதால் மகிழ்ச்சியில் சாயம் படக்குழுவினர்..!

ஒயிட் லேம்ப் புரொடக்சன் சார்பில் ஆண்டனி சாமி மற்றும் எஸ்பி ராமநாதன் இணைந்து தயாரித்திருக்கும் படம் சாயம். இந்த படத்தை ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்க, ஷைனி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார். யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

படிக்கும் காலத்திலேயே மாணவர்களிடம் ஜாதி உணர்வு புகுத்தப்பட்டால் அது அவர்களது எதிர்கால வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.

சாயம் திரைப்படம் கடந்த பிப்ரவரி 4 அன்று தமிழகமெங்கும் 90 திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே தென் மாவட்டங்களில் இருந்து இயக்குனருக்கு மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தது. அத்தனை எதிர்ப்புகளையும் மீறி பல திரையரங்குகளில் படம் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது சாயம் திரைப்படம்.

தென்மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம் படத்தில் காட்சிகள் இருப்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று படத்தை பார்த்து வருகின்றனர். இதனால் பல தியேட்டர்களில் காட்சிககள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் ரிலீஸ் அன்று திரையிடப்படாத பல தென் மாவட்ட தியேட்டர்கள் கடந்த திங்கள் முதல் படத்தை திரையிட துவங்கியுள்ளனர். படத்தின் வெற்றியை உணர்ந்த மதுரை சண்முகா (மாப்பிள்ளை விநாயகர் ), வத்தலகுண்டு சீனியப்பா, திருநெல்வேலி, சுரண்டல் மற்றும் கடையம் ஆகிய இடங்களில் ஒரு தியேட்டர் என தியேட்டர் உரிமையாளர்களே தாமாக முன்வந்து கடந்த ஞாயிறு முதல் சாயம் படத்தை தனது தியேட்டரில் வெளியிட்டு வருவதே இந்த வெற்றிக்கு உதாரணம்.இது போல தமிழகத்தில் பல காட்சிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் சாயம் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Theatres Increased for Saayam Movie
jothika lakshu

Recent Posts

திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

8 hours ago

இட்லி கடை திரைவிமர்சனம்

தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…

8 hours ago

விருது வாங்கிய ஜீவி பிரகாஷிற்கு ஏ ஆர் ரகுமானின் அன்பு பரிசு..!

ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…

11 hours ago

மருமகள் சீரியல் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்.. வெளியான புதிய நேரம்.!

விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…

14 hours ago

இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் இதோ உங்களுக்காக.!!

இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

14 hours ago

ரோகினி போட்ட திட்டம், விஜயாவுக்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…

16 hours ago