The song controversy of Sai Pallavi came to an end
சாய்பல்லவி நடித்துள்ள லவ் ஸ்டோரி தெலுங்கு படத்தில் இடம்பெற்ற சாரங்க தரியா பாடல் சமீபத்தில் யூடியூப் தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. மங்லி பாடிய இந்த பாடலுக்கு சாய்பல்லவி நடனம் ஆடி நடித்து இருந்தார். இந்த நிலையில் வாரங்கலை சேர்ந்த கிராமிய பாடகி கோமாலி, சாரங்க தரியா பாடல் எனக்கு சொந்தமானது. மேடை நிகழ்ச்சிகளில் இதனை பாடி வந்தேன்.
அந்த பாடலை இயக்குனர் சேகர் கம்முலு படத்தில் பயன்படுத்த என்னிடம் இருந்து வாங்கினார். என்னையே பாடவும் வைத்தார். பின்னர் எனக்கு தெரியாமல் வேறு பாடகியை பாட வைத்து விட்டார். சினிமாவில் கிராமிய பாடகர்களை சுரண்டுகின்றனர்” என்றார். இது சர்ச்சையானது.
இதற்கு பதில் அளித்து சேகர் கம்முலு கூறும்போது, “இந்த பாடலை சிரிஷா என்பவரை தோராயமாக பாட வைத்து படமாக்கினோம். பின்னர் அவர் கர்ப்பமாக இருந்ததால் பாட முடியவில்லை. அதன்பிறகு மங்லி பாடினார். பாடல் வெளியான பிறகுதான் கோமாலி பற்றி தெரிந்தது. இந்த பாடல் விவகாரத்தில் சிரிஷா, கோமாலி ஆகிய இருவருக்கும் பணம் வழங்கப்படும்” என்றார். இதன் மூலம் சர்ச்சைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…