‘தளபதி 65’ படக்குழுவின் அடுத்த பிளான்

விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தை நெல்சன் இயக்குகிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த 2 வாரங்களாக ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் அங்கு முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு சென்னை திரும்ப உள்ளனர்.

இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பியதும், சில நாட்கள் ஓய்வுக்கு பின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க உள்ளார்களாம். முதலில் சென்னையில் விஜய் – பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சியை படமாக்க உள்ளார்களாம்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

Suresh

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago