பொய்யா விளக்கு – மண்ணை இழந்தோம் பாடல் வெளியீடு!

பொய்யா விளக்கு திரைப்படத்தில் இடம்பெற்று பார்த்தவர்களால் மிகவும் வரவேற்கப்பட்ட ‘மண்ணை இழந்தோம்‘ என்ற பாடல் இணையத்தில் இன்று வெளியிடப்பட்டிருக்கின்றது.

இந்த பாடலை கீழுள்ள இணைய இணைப்பில் பார்க்கலாம்.

தமிழ் இன அழிப்பின் பின்னர் பதினொரு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அந்த யுத்தபூமியில் மக்களோடு மக்களாக நின்று சேவையாற்றிய வைத்தியர்களை நாம் மறந்து விடலாகாது. அப்படி ஈழத்தின் இனப்படுகொலையின் வாழும் சாட்சியான வைத்தியர் வரதராஜா அவர்களின் உண்மைக் கதை பொய்யா விளக்கு.

மிகவும் தரமானதொரு திரைப்படமாக இது வெளியாகி கடந்த வருடம் திரைக்கு வந்த படம் பொய்யா விளக்கு. வைத்தியர் வரதராஜாவே இதில் நடித்தும் இருப்பது ஒரு சிறப்பு.

கொரோனா (COVID 19) காரணமாக தொடர்ந்து திரையிட முடியாமல் தடைப்பட்ட இத்திரைப்படத்தை இப்போது இணையத்தில் பார்க்கக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது.

இதனை எழுதி இயக்கியிருப்பவர் ஈழத்தமிழரும், தற்போது கனடாவில் வசிப்பவருமான தனேஸ் கோபால். ஈழ சினிமாவின் மிக முக்கியமான படமாக இது பார்க்கப்படுகின்றது.

இந்தப் படத்தில் எதுவிதமான அகோரக்காட்சிகளும் இல்லாமல் வலிகளைப் பதிய வைத்திருக்கிறார்கள். இனிமையான இசை, செழுமையான ஒளிப்பதிவு என்று ஒரு கவிதையாகப் படம் கையாளப்பட்டிருக்கிறது. வைத்தியரின் இயல்பான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

பொய்யா விளக்கு திரைப்படத்தினை இணையத் தளத்தினூடாக பார்க்கலாம்.

பொய்யா விளக்கு திரைப்படத்தினை www.thelampoftruth.com என்ற இணையத் தளத்தினூடாகக் கட்டணம் செலுத்தி பார்க்கலாம்.

ஈழத்தில் நிகழ்ந்த இன அழிப்புப் போரின் பின்புலத்தில் பணியாற்றிய மருத்துவரின் கதையினூடாக  இடம்பெற்ற அவலங்களின் முக்கிய நிகழ்வுகளை வெளிக்கொண்டு வரும் பொய்யா விளக்கு திரைப்படம் இப்போது இணையத்தினூடாக மக்களுக்கு எடுத்து வரப்படுகிறது.  பதினைந்துக்கு மேற்பட்ட சர்வதேச விருதுகளை திரைப்பட விழாக்களில் வென்று, ஈழத்திரைப்படங்களின் தரத்தினை பிறிதொரு தளத்துக்கு எடுத்துச் சென்ற இந்தத் திரைப்படம் எங்கள் மக்களின் கதைகளை சர்வதேச பரப்பில் எடுத்துச் செல்ல வேண்டுமென்ற வெண்சங்கு கலைக்கூடத்தின் ஆர்வத்தினைத் திருப்தி செய்வதாக இருக்கிறது.  இந்த முயற்சியினை வெற்றிகரமாக ஆக்குதல் எம் மக்களின் பொறுப்பாகும்.

ஒரு கொடூரப் போர் வீழ்த்திச் சென்ற எங்கள் மக்களின் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் தியாகங்களும், அவலங்களும் இன்னமும் இரத்தம் காயாத நினைவுகளோடு இருக்கின்றன.  இவை சொல்லப்படல் வேண்டும்.  இந்தப் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தலைமுறை இருக்கும் போதே, அந்தக் கதைகள் திரிபு படுத்தப்படாமல் உலகமெங்கும் எடுத்துச் செல்லப்படல் வேண்டும். பொய்யா விளக்கு என்ற இந்தத் திரைப்படம் இந்த நோக்கத்திற்கான ஒரு காத்திரமான முதற்படி. எமது வருங்கால சந்ததிக்கும், தமிழரல்லாதோருக்கும் கற்பிதலுக்கான ஒரு மூலமாக இது இருக்கிறது.

தொடர்ந்தும் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

பொய்யா விளக்கு மேலதிக விமர்சனங்கள் மற்றும் பார்த்தவர்களின் கருத்துக்களை https://whiteconchstudios.com/viewer-comments/ இல் காணலாம்.

admin

Recent Posts

கலர்ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்.!!

நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3…

1 hour ago

இட்லி கடை: 1 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

1 hour ago

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி.!!

கலர்ஃபுல் உடைய காவியா அறிவுமணி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலமானவர் காவியா அறிவுமணி. அதனைத்…

1 hour ago

நந்தினி சொன்ன வார்த்தை, சூர்யா கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

2 hours ago

அருணிடம் விஷயத்தை சொன்ன சீதா.. முத்து எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…

4 hours ago

திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

21 hours ago