The film crew sponsored the families of the victims of the Indian-2 shooting
இந்தியன் 2 படப்பிடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய கமல், விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்றார்.
இந்த நிலையில் இன்று இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு இழப்பீட்டை படக்குழுவினர் இன்று வழங்கினர். உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடும், படுகாயமடைந்த ராமராஜனுக்கு 90 லட்சம், சிறு காயமடைந்தவருக்கு 10 லட்சம் என மொத்தம் 4 கோடி ரூபாயை லைகா நிறுவனம் ரூ.2 கோடி, கமல் மற்றும் இயக்குனர் சங்கர் தலா ரூ.1 கோடியும் வழங்கினர்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது இரங்கல், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் பார்த்துக்கொள்வோம் என இயக்குனர் ஷங்கர் தெரிவித்தார்.
நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…
‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…
நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…
கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…