கமலுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு அரங்கில் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கிரேன் சரிந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டதால் பட வேலைகள் முடங்கின. தற்போது தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். அதுபோல், கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடிக்கிறார்.

இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கும்படி பட நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றது. தற்போது இந்த பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டு விரைவில் படப்பிடிப்பை தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

இந்த நிலையில் இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிந்து தற்போது கர்ப்பமாக இருப்பதால் படத்தில் நடிக்க முடியாது என்று வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. எனவே அவருக்கு பதில் வேறு கதாநாயகியை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

திரிஷா நடிக்க வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டது. தற்போது காஜல் அகர்வாலுக்கு பதில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க தமன்னாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. காஜல் அகர்வால் நடித்த காட்சிகளை நீக்கி விட்டு தமன்னாவை ஆரம்பத்தில் இருந்து நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Suresh

Recent Posts

“அவன் விஷால் மாதிரியே இருக்கான்!”-ஆர்யா உடைத்த ‘அவன் இவன்’ படப்பிடிப்பு தளத்தின் ரகசியம்!

இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம்…

3 hours ago

இறுதிக்கட்டத்தை எட்டிய விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம்…

3 hours ago

‘வடசென்னை 2’ல் தனுஷ் – சிம்பு இணைகிறார்களா?

தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘வடசென்னை 2’ திரைப்படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்…

4 hours ago

தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகம்! ‘லவ் ஓ லவ்’ திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய வாரிசு கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமாகிறார். தனுஷின் அக்கா…

4 hours ago

ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பத்ம பூஷண் விருது பெற்றார் மம்மூட்டி!

நாட்டின் பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகளை அறிவித்து வருகிறது.…

6 hours ago

‘அனைத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றும் நபருக்கு’ – விஜய்க்கு த்ரிஷாவின் சிறப்பு பிறந்தநாள் வாழ்த்து!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய் தனது 52வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு…

6 hours ago