சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட வாலிபர்களை மன்னித்த நடிகை

கேரள மாநிலம் கொச்சியில் ஒரு ஷாப்பிங் மாலுக்கு தாய் மற்றும் சகோதரியுடன் சென்ற இளம் நடிகை, அங்கு தன்னிடம் 2 வாலிபர்கள் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்தார்.

கொச்சி போலீசார் நடிகை வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்து வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வந்தனர்.

சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி இருந்த ஆதில் முகமது, ரம்ஷாத் என்ற 2 வாலிபர்கள் நடிகையிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிட்டனர்.

சரண் அடைவதற்காக களமசேரி போலீஸ் நிலையத்திற்கு வந்தபோது அவர்களை போலீசார் கைது செய்தனர். இருவரும் தாங்கள் தவறு செய்யவில்லை என்றும், தெரியாமல் நடந்திருந்தால் மன்னிக்குமாறும் கூறினர்.

இந்நிலையில் வாலிபரின் சில்மி‌ஷத்தால் பாதிக்கப்பட்ட இளம் நடிகை அந்த வாலிபர்களை மன்னிப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில் இந்த சம்பவத்தால் என் குடும்பம் வேதனை அனுபவித்து வருகிறது.

இதுபோல அவர்கள் குடும்பமும் வேதனை அனுபவிப்பதை நான் விரும்பவில்லை என்று பதிவிட்டிருந்தார். ஆனால் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 2 வாலிபர்களையும் போலீசார் நேற்று களமச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அவர்கள் இருவரையும் ஜெயிலில் அடைத்தனர்.

The actress forgave the teenagers involved in the scuffle
Suresh

Recent Posts

காந்தி கண்ணாடி திரைவிமர்சனம்

தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் பாலாஜி சக்திவேல், தனது காதல் மனைவி அர்ச்சனாவிடம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.…

45 minutes ago

அவல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

53 minutes ago

மதராசி திரை விமர்சனம்

சிறுவயதிலேயே தன் கண்முன்னே குடும்பத்தை இழந்த நாயகன் சிவகார்த்திகேயன், டெலியுசன் என்ற மன நோயால் பாதிக்கப்படுகிறார். அதாவது யாருக்காவது பாதிப்பு…

4 hours ago

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன்.!!

ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான…

4 hours ago

கூலி படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா? வாங்க பார்க்கலாம்.!!

கூலி படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர்…

8 hours ago

மதராசி படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் இதோ உங்களுக்காக..!

மதராசி படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில்…

9 hours ago