thangalaan movie latest update
கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். இவர் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் “தங்கலான்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.
பயங்கரமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை 80 சதவீதம் நிறைவடைந்து இருப்பதாகவும் இன்னும் 25 நாட்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும் சமீபத்தில் பா.இரஞ்சித் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதையடுத்து இப்படத்தின் புதிய அப்டேட்டாக இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு நடிகர் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதன்படி இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் மே 2ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும் இந்த படப்பிடிப்பு 15 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதனை தொடர்ந்து மதுரையில் 10 நாட்களுக்கு நடைபெற இருக்கும் படப்பிடிப்புக்கு பிறகு ஒட்டுமொத்த படப்பிடிப்பு நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…