இதுதான் விஜயின் கடைசி படமா? ஷாக்கான ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். லியோ படத்தில் நடித்து வரும் இவர் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அதே சமயம் இந்த படத்தை முடித்துவிட்டு ஆறு மாதம் பிரேக் எடுக்கப் போகிறார், இந்த பிரேக் அரசியலுக்கு அஸ்திவாரம் போடுவதற்காக தான் எனவும் தகவல் வெளியானது. அதற்கேற்றார் போல பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் விஜய் தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக மக்களுக்கு உணவு வழங்கினார்.

மேலும் 10, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து பேச உள்ளார். கிட்டத்தட்ட 6000 பேர் பங்கேற்கும் வகையில் இது குறித்த நிகழ்ச்சி ஒன்று மதுரவாயில் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் விஜய் தனது எழுபதாவது படத்தோடு நடிப்பதை நிறுத்திக்கொண்டு முழுமையாக அரசியலில் இறங்க அதிக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.அரசியல் வருகை மகிழ்ச்சியளித்தாலும் விஜய் நடிப்பதை நிறுத்த போவதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு கவலை அளித்துள்ளது.

thalapathy vijay’s last movie update
jothika lakshu

Recent Posts

The Wedding Song Lyric Video

The Wedding Song Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…

11 hours ago

சான் டியேகோ காமிக்-கானில் ‘ராமாயணம்’ டிரெய்லர் வெளியீடு – இந்தியாவில் எப்போது ரிலீஸ்?

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில்…

11 hours ago

நிர்வாணக் காட்சி படப்பிடிப்பில் பழுதான கேமரா – ஃப்ளோரன்ஸ் பியூ பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சங்கடமான அதேசமயம் சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகை ஃப்ளோரன்ஸ்…

12 hours ago

அனிருத் இசையில் லோகேஷ் நடித்த ‘டிசி’ படத்தின் மியூசிக் ஆல்பம் வெளியீடு!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘டிசி’. ‘ராக்கி’,…

12 hours ago

சென்னை பாலன் இல்லத்தில் நடக்கும் மாணவர்கள் போராட்டம் போலியானது – சனம் ஷெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் போலியானது என்றும், அரசியல் அஜெண்டாவுடன் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகவும் நடிகை…

12 hours ago

தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து கலக்கிய நடிகைகள்!

சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகிய பிறகு, மீண்டும் திரும்பும் நடிகைகளுக்கு முன்பு இருந்த அதே வரவேற்பு கிடைக்குமா என்பது…

12 hours ago