thalapathy vijay-thanked-rajinikanth
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கோட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.விஜய் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வந்தார். சமீபத்தில் நடிகர் விஜய் தனது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், தனது 69-வது படத்திற்கு பிறகு இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை விமான நிலையத்திற்கு சென்ற நடிகர் ரஜினியிடம் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, ‘வாழ்த்துகள்’ என்று ஒரு வரியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்த ரஜினியை தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்ததாகவும் இருவருக்குமான உரையாடல் 15 நிமிடங்கள் நீடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விஜய்யை பாராட்டியது மட்டுமல்லாமல் அரசியல் குறித்த அறிவுரைகளையும் ரஜினி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றை பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…
இட்லி கடை படத்தின் 5 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு…
பிக் பாஸ் முதல் ப்ரோமோ இன்று வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…