“அவர் பெரிய தலைவராக வர வேண்டும்”:விஜய் குறித்து பேசிய இயக்குனர் பேரரசு

சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் \”நினைவெல்லாம் நீயடா\”. பிரஜின் கதாநாயகனாக நடிக்க, மனீஷா யாதவ் ஹீரோயினாக நடிக்கிறார். \”அப்பா\” படப்புகழ் யுவலட்சுமி இளம் நாயகியாக அறிமுகமாகிறார். சினாமிகா இன்னொரு நாயகியாக அறிமுகமாகிறார். இளம் நாயகனாக ரோஹித் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மனோபாலா, மதுமிதா, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முத்துராமன், பி.எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ராஜா பட்டா சார்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு, \”இங்கே சரியான தலைவர்கள் நிறைய பேர் இல்லை. விஜய் ஒரு நல்ல தலைவராக வர வேண்டும் என எதிர்பார்ப்போம். நான் என்றுமே விஜய்யின் விசுவாசி தான். அவர் பெரிய தலைவராக வரவேண்டும். இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது எனக்கு ‘பன்னீர் புஷ்பங்கள்’ படம் ஞாபகத்திற்கு வந்துவிட்டது. நம்மை பள்ளி காலகட்டத்திற்கு அழைத்துச் சென்று விட்டது. இளையராஜாவின் 1,417-வது படம் இது. இந்த சாதனையை இசைஞானி ஒருவரால் தான் செய்ய முடியும்.

நாம் சோகமாக இருக்கும் போதெல்லாம் அவருடைய பாடல்களைக் கேட்டு ஆறுதல் அடைந்தோம். இன்று அவர் வீட்டில் துக்கம்.. ஆண்டவன் தான் அவருக்கு ஆறுதல் தரவேண்டும். படத்தில் நடித்துள்ள யுவலட்சுமிக்கு நடிகை சுவலட்சுமியின் குடும்ப பாங்கான தோற்றம் அப்படியே இருக்கிறது. காதலித்து தோல்வி அடைந்தவர்கள் அப்படியே அந்த பசுமையான நினைவுகளுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். 20 வருடங்களுக்குப் பிறகு காதலியைப் போய் பார்க்கலாம் என்று நினைத்தால் உங்களுக்கு அவரது தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சி தான் கிடைக்கும். அதன் பிறகு மனதில் பசுமையான நினைவுகள் எதுவுமே வராது\” என்று கூறினார்.

director perarasu-speech-goes-viral
jothika lakshu

Recent Posts

RANABAALI Teaser

RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan

20 hours ago

Magale Music Video

Magale Music Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

20 hours ago

இளையதிலகம் பிரபு நடிக்கும் ‘அழகிய லைலா’ படப்பிடிப்பு தொடங்கியது!

ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…

20 hours ago

மதுரையில் ‘சேயோன்’ படப்பிடிப்பு: ரசிகர்களுக்கு ஜிகர்தண்டா வாங்கிக் கொடுத்த சிவகார்த்திகேயன்!

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…

20 hours ago

இந்தி தேசிய மொழியா? சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்புக் கோரிய சிவராஜ் குமார்!

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…

21 hours ago

தீபாவளி ரிலீஸ்: சூர்யாவின் 47வது படத்திற்கு ‘SCENE’ என தலைப்பு வைப்பு!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…

21 hours ago