Thalapathy 68 movie Latest update
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லியோ படத்தின் டிரைலர் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது. எனினும், எத்தனை மணிக்கு டிரைலர் வெளியாகும் என்பது பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 68 பற்றிய அப்டேட்-ஐ அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்துள்ளார். இது குறித்த தகவலை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
அதில், “உங்களின் அன்பு மற்றும் வாழ்த்துகளுடன் தளபதி 68 துவங்கியது. இது மகிழ்ச்சியான ரோலர் கோஸ்டர் ரைட் ஆக இருக்க போகிறது. லியோ வெளியீட்டை தொடர்ந்து அனைத்து புகைப்படங்கள் மற்றும் இதர அப்டேட்கள் வழங்கப்படும். கடவுள் கருணை மிக்கவர்,” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…
அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றிப்படம் ஆகி விட்டது அனில் ரவிபுடி…
விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட் தெலுங்கு சினிமாவான 'ரணபலி' படத்தின் தகவல்கள்…
KGF -காந்தாரா டீமுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் ? இயக்குனர் யார் தெரியுமா ? பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே…
கலெக்டர் ஆபீஸ்க்கு மனுவுடன் வந்துள்ளார் பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு - முழு விவரம் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு…