‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு – முழு விவரம்

‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு – முழு விவரம்

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், இந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்பியது. இதை எதிர்த்து படத்தயாரிப்பு குழு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா, இப்படத்தை மறுஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து, உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று அளித்த தீர்ப்பில், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் பதில் மனு தாக்கல் செய்ய முறையான வாய்ப்பு வழங்காமல் தனி நீதிபதி பி.டி.ஆஷா அத்தகைய உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கக் கூடாது என்று கூறியது.

இருப்பினும், ரிட் மனுவைத் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக, தயாரிப்பு நிறுவனம் விரும்பினால், ரிட் மனுவை மீண்டும் விசாரணைப் பட்டியலில் சேர்த்து, தனி நீதிபதி முன்பு புதிய விசாரணைக்கு பட்டியலிடுமாறு உத்தரவிட்டது.

படத்தில் ராணுவ சின்னங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அன்னிய சக்திகள் நாட்டில் கலவரம் ஏற்படுத்துவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தீவிரமான புகார் வந்துள்ளதால், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தீவிரமான புகார் கூறப்பட்டுள்ள நிலையில், பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்காமல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என குறிப்பிட்டனர்.

மேலும், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்த வழக்கில் கோரிக்கையை திருத்தம் செய்து பட நிறுவனம் மனுத்தாக்கல் செய்யலாம். அந்த மனுவுக்கு சென்சார் போர்டு பதிலளிக்க அவகாசம் வழங்கி தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Continuing problems with the film ‘Jananayakan’: High Court orders re-investigation – Full details
dinesh kumar

Recent Posts

மொத ராத்திரி – திரை விமர்சனம்

வெளிநாட்டில் பணிபுரியும் ரிஷிகாந்துக்குத் தெரியாமலேயே அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மறுபுறம், மணப்பெண் அனீஸ்மா தான் காதலித்தவருடன் ஓடிச் செல்லத்…

4 minutes ago

“கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா?” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த கருத்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது…

15 minutes ago

“தனுஷ் அரசியலுக்கு வந்தால் எப்போதும் என் ஆதரவு உண்டு” – ஜி.வி.பிரகாஷ் குமார்

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவருக்கு எப்போதும் தனது முழுமையான ஆதரவு இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார்…

21 minutes ago

8 ஆண்டுகளுக்கு முன்பு நட்டு வைத்த மரத்தை பார்த்து பூரிப்படைந்த சசிகுமார்!

கொடைக்கானலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்ற நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வளர்ந்து பூத்துக்…

27 minutes ago

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 94. 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக…

33 minutes ago

Hi Movie Official Trailer

Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…

19 hours ago