தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டதும் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
ரூபாய் 150 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக இருந்து வருகிறது. இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான நிலையில் தற்போது கேஜிஎப், கைதி ஆகிய படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய தேசிய விருது பெற்ற அன்பு, அறிவு என்ற இரட்டையர்கள் தளபதி 65 படத்தில் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய் படத்தின் சண்டைக் காட்சிகளுக்கு எப்போதும் தனி மவுசு இருக்கும் என்பதால் இவர்களை தேர்ந்தெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தளபதி 65 படத்தின் சண்டைக் காட்சிகள் நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், சமூக…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தைப்…
தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான…