தளபதி 67 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது தெரியுமா? வைரலாகும் சூப்பர் தகவல்

கோலிவுட் திரையுலகில் பிரபலம் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் இளைய தளபதி விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருடன் இணைந்து ரஷ்மிகா மந்தனா, யோகி பாபு, பிரபு, சரத்குமார், சங்கீதா, ஷாம் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் குறித்து எந்த ஒரு உறுதியான அறிவிப்பும் இதுவரை வெளிவராமல் இருக்கும் நிலையில் இப்படத்தில் இணைய இருக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்போடு இருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 5ஆம் தேதி தொடங்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு மூணாரில் நடைபெற உள்ளதாகவும் அதற்காக மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

thalapathi 67 movie shooting update ho
jothika lakshu

Recent Posts

சூர்யா 46 : மமிதா பைஜூ சொன்ன லேட்டஸ்ட் தகவல்..!

சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…

8 hours ago

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்!

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…

8 hours ago

இளையராஜாவுக்கு இடைக்கால தடை.. ஐகோர்ட் கொடுத்த உத்தரவு..!

இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…

8 hours ago

அஜித் 64 : எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

8 hours ago

Aadiney Irupen Video Song

https://youtu.be/MaMswoJy9bg?si=Z1FaSuHv6-M5LXbK

9 hours ago

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு – விரைவில் திரைக்கு வருகிறது!

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…

14 hours ago