தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜெயிலர்.
இப்படத்தை கடந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ள இவர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 170 படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், பகத் பாஹில், ராணா டகுபதி என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஆமாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் விருந்தாக வரும் டிசம்பர் 11ம் தேதி அல்லது 12-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…