Thalaivar 169 Movie Update
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் திறமையான இயக்குனராக இடம் பிடித்தவர் நெல்சன் திலீப் குமார். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து இவருக்கு தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இவர் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பாகவே நெல்சன் திலீப் குமார் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
ஆனால் பீஸ்ட் படம் அதிகமான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்ததன் காரணத்தினால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் நடிக்க தயக்கம் காட்டுவதாக சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தலைவர் 169 அறிவிப்பு வீடியோவிலிருந்து புகைப்படத்தை எடுத்து தனது கவர் போட்டோவாக மாற்றியுள்ளார்.
அதைப்போல் நெல்சன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனது படங்களின் வரிசையில் தலைவர் 169 என்பதையும் சேர்த்துள்ளார். இதன் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் என இருவருமே அடுத்த கூட்டணியை உறுதி செய்துள்ளனர்.
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…