Satellite Details of Cobra Movie
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் இறுதியாக மகான் என்ற திரைப்படம் அமேசான் பிரைம் விடியோ வழியாக வெளியானது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து அவருடைய மகன் துருவ் விக்ரம் அவர்களும் நடித்திருந்தார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் சியான் விக்ரம். அவரது நடிப்பில் அடுத்ததாக அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் வெளியாக உள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில் இந்த படம் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி கைப்பற்றியுள்ளது. மேலும் இப்படத்தை சுதந்திர தின விழா ஸ்பெஷலாக ஆகஸ்ட் 15ஆம் தேதி ஒளிபரப்ப திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
சியான் விக்ரம் ரசிகர்களும் இந்தப் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதிக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…