கொரோனா ஊரடங்கினால் 2 மாதங்களுக்கு மேலாக திரையுலகம் முடங்கி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. தியேட்டர்கள் மூடப்பட்டு கிடக்கின்றன.
இதனால் தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள், திரைப்பட தொழிலாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு உளளனர். தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை ஈடு கட்ட நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அதன்படி நடிகர் விஜய் ஆண்டனி, தான் நடித்து வரும் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய 3 படங்களின் சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துக்கொள்வதாக அறிவித்து உள்ளார்.
இதுபோல் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், நாசர், உதயா, அருள்தாஸ், நடிகை ஆர்த்தி ஆகியோரும் சம்பளத்தை குறைத்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகை டாப்சியும் சம்பளத்தை குறைத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள தயாரிப்பாளர்களுக்கு உதவுதற்காக சம்பளத்தை குறைத்துக்கொள்ள தயாராக இருக்கிறேன்.
சினிமா துறை மீண்டும் சகஜ நிலை திரும்புவதற்காக சம்பளம் குறைக்கப்படுவதை தவிர்க்க முடியாது” என்று கூறியுள்ளார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சால் திரையரங்கத்தை அதிர விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார்…
டிரைவராகவே தொடர விரும்புவதாக அஜித் கூறியதால் ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…
விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத்…
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த 'வாரணாசி'..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் உலக அளவில்…