Tamil Tv Actor Venu Arvind admitted to intensive care unit
திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் வேணு அரவிந்த். இவர் கே.பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். மேலும் வாணி ராணி, சந்திரகுமாரி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா தாக்குதலுக்குப் பின்பு நிமோனியா வந்ததாலும், மூளையில் கட்டி வந்து அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றியதாலும், கோமா நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த சின்னத்திரை நடிகர்கள் பலரும் வேணு அரவிந்த் குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…
கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…
நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…
தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…