tamanna-gets-most-stylish-award
இந்திய திரை உலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடிப்பவர். தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கல்லூரி என்னும் திரைப்படத்தில் எதார்த்தமாக நடித்தார். அப்படம் தமன்னாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது.
இதையடுத்து நடிகர் தனுஷ் உடன் இணைந்து படிக்காதவன், சூர்யாவுடன் அயன்,விஜய்யுடன் சுறா ஆகிய படங்களில் நடித்தார். கன்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா, பாகுபலி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் ,தெலுங்கு , கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 70 படங்களிலும், 65 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அதிக ரசிகர்களை பெற்றுள்ள தமன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடுவது மற்றும் தனது ஸ்டைலிஷ் ஆனா புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து அவர்களை குஷிப்படுத்துவது போன்றவற்றை செய்து வருவார். அந்த வகையில் தற்போது தமன்னா Lokmat Most Stylish Award 2022 என்கின்ற விருதினை பெற்றுள்ளார். இது குறித்து தனது மகிழ்ச்சியை வீடியோ பதிவின் மூலம் பகிர்ந்துள்ள தமன்னா அதில், “விருதுக்கு மிக்க நன்றி நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்” என்று பதிவிட்டு பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…