தோனி வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அவரது மரணம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
அதேசமயம் சுஷாந்த் சிங்கின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்திருக்கும் நிலையில், தூக்குக் கயிறு கழுத்தில் இறுக்கியதால் மூச்சு திணறி உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்திருந்தது.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
திரைத்துறைக்குள் இருக்கும் வாரிசு அரசியல், அதிகார துஷ்பிரயோகம், பின்புலம் இல்லாமல் துறைக்குள் வருபவர்களை வாரிசுகள் நடத்தும் விதம் என பல்வேறு பிரச்சினைகள் குறித்து பல பிரபலங்கள் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் பீகார் மாநிலம் முஷாபர்பூர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
சல்மான் கான் உள்ளிட்டோர் கொடுத்த அழுத்தம் காரணமாக சுமார் 7 படங்களில் இருந்து சுஷாந்த் சிங் நீக்கப்பட்டதாகவும், அதனால் பட வாய்ப்பு இல்லாமல் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் வழக்கறிஞர் சுதிர்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
அதில் பிரபல நடிகர் சல்மான் கான், கரண் ஜோஹர், சஞ்சய் லீலா பண்சாலி, ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பேர் மீது சுஷாந்த் சிங் ராஜ்புத்தை தற்கொலைக்கு தூண்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் மீது சட்டப்பிரிவு 306, 109 உள்ளிட்ட 4 பிரிவுகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா தெரிவித்துள்ளார்.
முன்னதாக திரைப்பட வாய்ப்புகள் வரவிடாமல் தனது திரை வாழ்க்கையை நாசமாக்கியது சல்மான் கானும் அவரது குடும்பத்தினரும் தான் என்று தபாங் பட இயக்குநர் அபினவ் சிங் காஷ்யப் குற்றம் சாட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ்…
அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என கே எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்! சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய…
பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்? கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா…
சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்? சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை ‘ட்யூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.…
4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்! விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் முதல்…