suriya-character-in-vikram-movie
தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன் நடித்தது மட்டுமல்லாமல் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள விஷயம் சர்ப்ரைசாக வைக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார் லோகேஷ்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ள ரத்னகுமார் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார். படத்தின் முக்கியமான திருப்புமுனையாக சூர்யாவின் கதாபாத்திரம் இருக்கும் எனவும் அவர் வரும் காட்சிகள் எனர்ஜிட்டிக்காக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
ரத்னகுமார் கூறிய இந்த தகவல்களால் சூர்யா ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி உள்ளது. மேலும் படத்தில் கமல்ஹாசன் பெயர் கூட வேறு ஒரு பெயர் என்பதால் யார் தான் அந்த விக்ரம் என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…
சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக…
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…
ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…