Categories: NewsTamil News

சிபிசிஐடி போலீசார் விசாரணை – சாத்தான்குளம் வீடியோவை நீக்கினார் சுசித்ரா

சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ், போலீசார் விசாரணையில் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தைத் தாண்டி உலக அளவில் பேசப்பட்டது. பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

இதனிடையே சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்தை விரிவாக ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார் பின்னணி பாடகி சுசித்ரா. இதையடுத்து ஆங்கில ஊடகங்கள் இச்சம்பவம் குறித்து பேசத் தொடங்கின.

சாத்தான்குளம் விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய சிபிசிஐடி போலீசார், 10 காவல்துறையினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் விடுத்திருக்கும் அறிக்கையில், “பாடகி சுசித்ரா, என்பவரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட சாத்தான்குளம் நிகழ்வு குறித்த காணொளி முற்றிலும் உண்மைத்தன்மையற்றது.

இது போன்ற காணொளிகளை வெளியிடுவது வழக்கின் புலனாய்வை பாதிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. எனவே பொதுமக்கள் இத்தகைய காணொளிகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்தது.

இதையடுத்து தான் பதிவிட்ட வீடியோவை பாடகி சுசித்ரா நீக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, “சிபிசிஐடி போலீசார் அழைத்தார்கள்.

போலி செய்திகளை பரப்பியதற்காக கைது செய்யப்படுவீர்கள் என்று அச்சுறுத்தினார்கள். எனது வழக்கறிஞரின் அறிவுரைப்படி நான் வீடியோவை நீக்கியிருக்கிறேன். மக்கள் இந்த வழக்கை கவனிக்க வேண்டும். பல தவறான நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன” என்று தெரிவித்திருக்கிறார்.

admin

Recent Posts

திட்டம் போட்டு வாத்தியாரை அனுப்பிய சுந்தரவல்லி.. வருத்தப்பட்ட நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

49 minutes ago

முத்து மீது கோபப்பட்ட மீனா.. ஸ்ருதி ரவிக்கு வந்த புதிய சிக்கல்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

வீட்டு வேலைக்கு வந்த பெண்மணி கண்டிஷனை கூட விஜயா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

1 hour ago

சூர்யா கொடுத்த வார்னிங்.. மாதவி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

16 hours ago

அஜித் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் சிங்கம் புலி..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…

18 hours ago

சிம்பு குறித்து பேசிய நடிகர் கென் கருணாஸ்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல…

19 hours ago

வெற்றிமாறன் எழுதிய முதல் கதை அரசன்.. இயக்குனர் ராம் ஓபன் டாக்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்…

19 hours ago