முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்..

முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்..

த கேரள ஸ்டோரி-2 படம் தொடர்பாக எழுந்துள்ள கடும் விவாதம் பற்றிப் பார்ப்போம்..

சுதிப்டோ சென் இயக்கத்​தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம், ‘த கேரளா ஸ்டோரி’. இந்​தப் படத்​துக்கு நாடு முழு​வதும் எதிர்ப்பு கிளம்​பியது. சில மாநிலங்​களில் இந்​தப் படம் தடை செய்​யப்​பட்​டது. இப்​போது ‘த கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ என்ற பெயரில் அதன் அடுத்த பாகம் உரு​வாகி இருக்​கிறது.

பிப்​ரவரி 27-ல் வெளி​யாக இருக்​கும் இதை கமக்யா நாராயண் சிங் இயக்கி உள்​ளார். விபுல் ஷா தயாரித்​துள்​ளார். உல்கா குப்​தா, அதிதி பாடி​யா, ஐஸ்​வர்யா ஓஜா முதன்மை வேடங்​களில் நடித்​துள்​ளனர். இதன் டிரெய்​லரில் இந்​துப் பெண்​களை மதம் மாற்​று​வது, கட்​டாயப்​படுத்தி மாட்​டிறைச்சி சாப்​பிட வைப்​பது போன்ற காட்சிகள் இடம்​பெற்றிருப்​பது சர்ச்சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இதை இயக்​குநரும் நடிகரு​மான அனு​ராக் காஷ்யப் கடுமை​யாகச் சாடி​யிருந்​தார். ‘இதன் டிரெய்​லரில் காட்​டு​வதைப் போல யாராவது அப்​படி மாட்​டிறைச்சி யை ஊட்​டு​வார்​களா? கிச்​சடியைக் கூட அப்​படி ஊட்​ட​மாட்​டார்​கள். அது முட்​டாள்​தன​மான படம். இந்​தப் படத்​தின் நோக்​கம், மக்​களிடையே பிரி​வினையை உரு​வாக்கி பணம் சம்​பா​திப்​பது​தான். தயாரிப்​பாளர் பேராசைக்​காரர்’ என்றார்.

இந்​நிலை​யில், இதற்​குப் படத்​தின் இயக்​குநர் கமக்யா நாராயண் சிங் பதில் அளித்​துள்​ளார். அவர் கூறும்​போது, ‘அனு​ராக் சொன்​னது​போல, ஒரு​வருக்கு யாரும் அப்​படி கிச்​சடி கூட ஊட்​டு​வ​தில்​லை. ஒப்​புக்​கொள்​கிறேன்.

ஆனால் துர​திர்​ஷ்ட​வச​மாக, நம் சமூகத்​தில், மத மாற்​றத்​துக்​காகக் கட்​டாயப்​படுத்தி மாட்​டிறைச்சி ஊட்​டப்​படு​கிறதே. இது குற்​றம்​தான். பிரச்​சினை என்​னவென்​றால், அனு​ராக் காஷ்யப் மனரீ​தி​யாகப் பலவீன​மாகி​விட்​டார்; அவருக்கு எல்​லா​வற்​றி​லும் பிரச்​சினை இருக்​கிறது.

அவருக்​குப் புத்​தியை வழங்க எல்​லாம் வல்ல இறைவனை வேண்​டு​கிறேன்” என்று தெரி​வித்​துள்ள அவர், “ஒரு படம் கட்​டாய மத மாற்​றம் அல்​லது ஏதாவது ஒரு விஷ​யத்​தில் அழுத்​தம் பற்​றிப் பேசி​னால், அது வெறுப்பு படம் என்று முத்​திரை குத்​தப்படு​கிறது. எந்​தவொரு விவாத​மும் தனிப்​பட்ட பரிந்​துரைகளை அடிப்​படை​யாகக் கொண்​டிருக்​கக் கூடாது, உண்​மை​களை அடிப்​படை​யாகக் கொண்​டிருக்​க வேண்​டும்​’ என்வும் கூறியுள்​ளார்​.

Stupidity, psychopath: Famous directors have a heated argument..
dinesh kumar

Recent Posts

Othaiyadi Video Song

https://youtu.be/xIuY5dk5Ug0?si=a9xZXKUGKeZv8lui

18 hours ago

Jilpanso Video

https://youtu.be/ljDYhKzWCO4?si=jaElqempCQraYPlU

18 hours ago

வதந்திகளை நம்பாதீர்.. அஜித் 64 படம் குறித்து ட்விட்டர் பிரபலம் ரமேஷ் பாலா பதிவு..!

அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி…

18 hours ago

மணிரத்தினம் இயக்கப் போகும் புதிய படத்தின் அப்டேட்..இதோ உங்களுக்காக..!

மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி…

18 hours ago

வாத்தியாருக்கு போன் போட்ட சூர்யா.. வருத்தப்பட்ட நந்தினி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

19 hours ago

Nee Forever – Official Trailer

https://youtu.be/Z-GvjDHlboE?si=gvivktj3desLdtBx

19 hours ago