Strict restrictions on ponniyin selvan's shooting
கொரோனா பரவல் காரணமாக சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர், சில கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு “பொன்னியன் செல்வன்” படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ஐதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்ட செட்டில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்காக ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்பட படக்குழுவினர் அனைவரும் ஐதராபாத் விரைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓட்டல் அறையிலிருந்து படப்பிடிப்புத் தளத்துக்கு மட்டுமே செல்ல வேண்டும். படப்பிடிப்பு முடிந்தவுடன் ஓட்டல் அறைக்குச் செல்ல வேண்டும் எனவும் இதற்கிடையில் வேறு எங்கும் பயணிக்கக் கூடாது என்று படக்குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், படப்பிடிப்புத் தளத்துக்கு வந்துவிட்டால் பணிகள் அனைத்துமே முடித்துவிட்டுத்தான் வெளியே செல்ல வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
திணை அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
The Raja Saab Tamil Trailer | Prabhas | Maruthi | Thaman S | TG Vishwa…
குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இட்லி கடை படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம்…
தனது கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பென்சி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி…
மாதவி திட்டம் ஒன்று போட, சுந்தரவல்லி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…