ஹாலிவுட் நடிகர் வின் டீசல் மீது உதவியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

“இயக்குனர் லூயிஸ் லெட்டரியர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தி ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ (The Fast and Furious). இப்படத்தின் ஒன்பது பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து பத்தாவது பாகமும் உருவானது. இப்படத்தில் வின் டீசல், ஜேசன் மோமோவா, மைக்கேல் ரோட்ரிக்ஸ் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பைக், கார் ஸ்டண்ட்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இப்படத்தில் நடித்திருந்த வின் டீசல் மீது அவரது உதவியாளர் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். 2010-ம் ஆண்டு வின் டீசலிடம் பணிபுரிந்த அஸ்ட்ரோ ஜோனாசன் என்பவர் லாஸ் ஏஞ்சல்ஸில் வழக்கு தொடர்ந்துள்ளார். படப்பிடிப்பின் போது அட்லாண்டாவில் உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் பல பெண்களுடன் அறை எடுத்து வின் டீசல் உல்லாசமாக இருந்தார்.

அதிகாலை நேரத்தில் சினிமா புகைப்படக் கலைஞர்கள் வருவதை அறிந்து அனைவரையும் க்ளியர் செய்துக் கொண்டிருந்தோம். அவரை ஷூட்டிங்கிற்கு அழைத்துச் செல்லும் பணி எனக்கு வழங்கப்பட்டது. அந்த பெண்கள் எல்லாம் சென்று விட்ட நிலையில், வின் டீசல் என்னிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். நான் அவருக்கு ஒத்துழைக்க மறுத்த நிலையில், அவரது சகோதரி என்னை அடுத்த நொடியே வேலையில் இருந்து நீக்கி விட்டார். இவ்வாறு அஸ்ட்ரோ ஜோனாசன் கூறியுள்ளார்.13 வருடங்களுக்கு பிறகு நடிகர் மீது அவரது உதவியாளர் பாலியல் புகார் கூறியுள்ள சம்பவம் ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “,

star-vin-diesel-accused-of-sexual-battery-by-former
jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

24 hours ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

24 hours ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

1 day ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

2 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

2 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

2 days ago