Sri divya re-entry
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.
இதையடுத்து காக்கிசட்டை, காஷ்மோரா, ஜீவா, ஈட்டி, மருது என அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வந்த அவர், கடைசியாக 2017ம் ஆண்டு வெளியான ‛சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.
அதன் பின்னர் 3 வருடங்களாக அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அவர் பாணா காத்தாடி பட இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்க உள்ளார். இதில் ஸ்ரீதிவ்யா பிசியோதெரபி மருத்துவராக நடிக்க உள்ளதாகவும் அவரது கதாபாத்திரத்தை சுற்றித்தான் கதை பின்னப்பட்டு இருப்பதாகவும் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் இது ஒரு அதிரடி ஆக்ஷன் கதை என்றும் அவர் கூறியுள்ளார்.
விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…
32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…
விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…
'ஓ ரோமியோ' டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நானா படேகர் கோபம்.. பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களின் ஒருவராகக் கருதப்படுபவர் நானா…
அனுபமாவின் “லாக் டவுன்” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்பதுபோல, திரைப்படம் இயக்கிப்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல…