Soundarya Rajinikanth special darshan at the Thiruchendur temple
நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே இயக்குனர்கள். இதில் ஐஸ்வர்யா, ‘3’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார். அதேபோல் சவுந்தர்யா ‘கோச்சடையான்’, தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ போன்ற படங்களை இயக்கி பிரபலமானார்.
ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா, கடந்த 2019-ம் ஆண்டு தொழில் அதிபர் விசாகனை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், சவுந்தர்யா தனது கணவர் விசாகனுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார். சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்ட அவர் கோவில் யானை தெய்வானைக்கு பழங்கள் மற்றும் கரும்புகள் வழங்கி ஆசி பெற்றார்.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…