Sorghum helps to increase body weight
நம் உடல் எடையை அதிகரிக்க ஜவ்வரிசி முக்கிய பங்கு வகிக்கிறது.
பெரும்பாலானோர் உடல் எடையை அதிகரிக்க உணவில் ஜவ்வரிசியை சேர்த்துக் கொள்கின்றனர். ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் மாவுச்சத்து அதிகம் உள்ளதால் இது ஒல்லியாகவும், பலவீனமாகவும், இருப்பவர்களுக்கு உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
ஜவ்வரிசியில் கால்சியம் மற்றும் நார்ச்சத்து குறைந்த அளவிலே இருக்கும்.
ஆனால் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால் தான் இது உடல் எடை அதிகரிக்க பயனுள்ளது என கூறப்படுகிறது. நாம் உணவில் பல வழிகளில் ஜவ்வரிசியை சேர்த்துக் கொள்ளலாம்..
முதலில் ஜவ்வரிசியை ஊற வைத்துவிட்டு பிறகு காலை நன்றாக சூடாக்கி ஒரு கிண்ணம் ஜவ்வரிசியை சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்.
பிறகு பாதாம் முந்திரி திராட்சை போன்ற உலர் பழங்களை சேர்த்தும் பாயாசம் செய்து சாப்பிடலாம்.
ஜவ்வரிசையில் காய்கறிகள் சேர்த்து கிச்சடி செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை எளிதில் அதிகரிக்கும். இது பசியை ஏற்படுத்தும் போது நாம் ஆரோக்கியமான உணவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக ஜவ்வரிசியில் சூப் செய்து குடிப்பது மிகவும் நல்லது. சூப் செய்வதற்கு முதலில் ஜவ்வரிசியை ஊற வைக்க வேண்டும்.
பிறகு தக்காளி சாறு எடுத்து அதில் கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி போட வேண்டும். ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து அதில் கேரட் மற்றும் தக்காளி மிக்ஸிங்கை சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் மிளகு சேர்த்து 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இப்படி செய்தால் சூடான சூப் ரெடி.
இவ்வாறு உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் இப்படி செய்வதே சிறந்தது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…