சொப்பன சுந்தரி திரை விமர்சனம்

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். அம்மா (தீபா ஷங்கர்), படுத்த படுகையான அப்பா, ஊமை அக்கா (லட்சுமி பிரியா) ஆகியோரை வைத்துக் கொண்டு சுயமரியாதையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷின் மூத்த அண்ணன் (கருணாகரன்) குடும்பத்தை கைவிடவே முழு பொறுப்பையும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்று குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்த நேரத்தில் இவருக்கு நகைக்கடை குலுக்கலில் பம்பர் பரிசாக கார் ஒன்று கிடைக்கிறது.

இந்த காரை வைத்து கடனை அடைத்து விடலாம் என்ற சந்தோஷத்தில் அவர் கனவு கோட்டைகளை கட்டுகிறார். அப்போது லட்சுமி பிரியாவை பெண் பார்க்க வந்தவர்கள் கல்யாணத்தை நாங்களே நடத்துகிறோம் காரை என் பையனுக்கு வரதட்சணையாக கொடுங்கள் என்று சம்மதம் பேசவே ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பமும் ஒத்துக் கொள்கிறார்கள். இந்த நேரத்தில் கருணாகரன் கார் எனக்கு தான் சொந்தம் என்று பிரச்சினை செய்கிறார்.

இந்த பிரச்சினை ஒரு கட்டத்தில் போலீஸ் விசாரிக்கும் அளவிற்கு செல்கிறது. அப்போது போலீசார் நகைக்கடையில் விசாரிக்க அவர்கள் பில் யார் பெயரில் இருக்கிறதோ அவர்களுக்கு தான் கார் என்று கூறிவிடுகின்றனர். இறுதியில், கார் யார் கையில் கிடைக்கிறது..? அண்ணன் ஏன் காரை அபகரிக்க முயற்சித்தான்..? என்பதே படத்தின் மீதிக்கதை. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மிடில் கிளாஸ் கதாபாத்திரத்தை மிகவும் அழகாக கையாண்டு படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். கார் கிடைத்த சந்தோஷத்தில் குதிக்கும் இடத்திலும், தனது அக்காவிற்கு ஒன்றும் நேர்ந்துவிடக்கூடாது என அவரை காப்பாற்ற போராடும் இடத்திலும் ஸ்கோர் செய்துள்ளார். அக்காவாக வரும் லஷ்மி பிரியா அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து இருந்தாலும் அவரை நினைவு கொள்ளும் அளவிற்கு கதாபாத்திரம் இல்லாமல் போனது ஏமாற்றம்.

தீபா மற்றும் கருணாகரன் தங்களுக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். சிம்பிளான கதையை எப்போதும் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக காமெடி ஜானரில் கொடுக்க நினைத்துள்ளார் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ். ஆனால் அது பல இடங்களில் ஒர்கவுட் ஆனாலும் சில இடங்களில் செட்டாகாமல் போனது வருத்தமே . அஜ்மலின் பின்னணி இசை படத்தை தாங்கி பிடித்துள்ளது. பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜ கோபாலின் ஒளிப்பதிவு படத்தின் விறுவிறுப்பை அதிகரித்துள்ளது. மொத்தத்தில் சொப்பன சுந்தரி – பார்க்கலாம்

soppana-sundari-movie review
jothika lakshu

Recent Posts

அத்திக்காயில் இருக்கும் நன்மைகள்.!!

அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…

1 hour ago

பைசன்: 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…

8 hours ago

டியூட்: 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்.!!

டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

9 hours ago

சண்டை போட்ட சீதா, விட்டுக்கொடுத்த முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…

9 hours ago

சூர்யாவை திருத்த நந்தினி எடுக்க போகும் முடிவு என்ன?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

10 hours ago

டாஸ்கில் கோபப்பட்ட ஆதிரை, வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

11 hours ago