இயக்குனர் துரை செந்தில்குமார் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், இப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து சமுத்திரகனி பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், “துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தம்பி சூரி கதைநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு” என்று குறிப்பிட்டு இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதற்கு ஜெட் வேகத்தில் சூரி படப்பிடிப்பை நிறைவு செய்ததாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
The One Rule Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…
Rathatha Thaa Lyrical Video | Demonte Colony 3 | Arulnithi, Priya Bhavani Shankar | Sam…
பிரபல நடிகை சாய் பல்லவி, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் (அண்ணாமலையார்) திருக்கோவிலுக்கு நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.…
இயக்குநர் ரமேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமராக…
'பாகுபலி' மற்றும் 'ஆர்ஆர்ஆர்' படங்களின் மூலம் இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, தற்போது நடிகர்…
நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்தைத் தொடர்ந்து, அவரது 64வது படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்…