அஜித்தின் 64வது படத்திற்கு ‘டேர் டெவில்’ என தலைப்பு… தயாரிப்பாளராக களமிறங்கும் ஷாலினி!

நடிகர் அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தைத் தொடர்ந்து, அவரது 64வது படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, அஜித்தின் 64வது படத்திற்கு ‘டேர் டெவில்’ (Dare Devil) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, நடிகரும் அஜித் குமாரின் மனைவியுமான ஷாலினி அஜித் குமார் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். அவர் தொடங்கியுள்ள Brave Hearts நிறுவனத்தின் சார்பில் இப்படம் தயாரிக்கப்பட உள்ளது.

கடந்த சில நாட்களாக ஷாலினி புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் இணைவதுடன், ஷாலினி தயாரிப்பாளராக புதிய இன்னிங்ஸை தொடங்கியிருப்பதும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suresh

Recent Posts

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

13 hours ago

7 Star Boys Official Trailer

7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…

13 hours ago

Avengers Endgame: Encore Official Tamil Trailer

Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25

13 hours ago

டாக்சிக் திரை விமர்சனம்

‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்‌ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…

13 hours ago

நயன்தாராவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…

13 hours ago

வெப் தொடரில் திரிஷா; நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகும் புதிய தொடர்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…

13 hours ago