soorarai pottru goes to next stage of Oscar competition
சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இதனிடையே ஆஸ்கர் விருதின் பொதுப்பிரிவுக்கு இந்த படம் தேர்வு செய்யப்பட்டதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற 366 திரைப்படங்களின் பட்டியலில் ‘சூரரைப்போற்று’ படமும் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
சிறந்த படம், சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி) ஆகிய பிரிவுகளில் சூரரைப் போற்று இடம்பெற்றுள்ளது. வருகிற மார்ச் 15-ந் தேதி ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் படங்களின் இறுதிப்பட்டியல் வெளியாகும், அதில் சூரரைப்போற்று இடம்பெறுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆஸ்கர் விருது விழா வருகிற ஏப்ரல் 25-ந் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson
ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…
சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது…
ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான மாஃபியா பணம் வெளிநாட்டில் உள்ள ஒரு லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.…
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப்…
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் பகத் பாசில், சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கடத்தல்…