sonu sood helped send the ambulance plane
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்தவர் கைலாஷ் அகர்வால். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், ஜான்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு இவரது உடல்நிலை மோசமானதால், உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். பின்னர் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையை தேடி அலைந்துள்ளனர். ஆனால் எங்கும் இடம் கிடைக்க வில்லையாம்.
இதையடுத்து டுவிட்டர் வாயிலாக நடிகர் சோனு சூட்டுக்கு நிலமையை எடுத்துக் கூறி உள்ளனர். இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இடம் இருப்பதை அறிந்த சோனு சூட், கைலாஷ் அகர்வாலை ஜான்சியில் இருந்து ஐதராபாத்துக்கு கூட்டிச் செல்ல தன் சொந்த செலவில் ஆம்புலன்ஸ் விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வரும் கைலாஷ் அகர்வால் தற்போது நலமுடன் உள்ளாராம். சோனு சூட்டின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…