சூர்யா படத்துக்காக கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற அருண் விஜய் மகன்

நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தரமான குடும்ப படங்களை தயாரித்து வருகிறது. இந்தப்பட நிறுவனம் அடுத்து குழந்தைகள் படத்தை தயாரிக்கிறது. இதில், நடிகர் விஜய குமாரின் பேரனும், நடிகர் அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் விஜய் கதை நாயகனாக நடிக்கிறான். அவனுக்கு 9 வயது ஆகிறது. 3-ம் வகுப்பு படிக்கிறான்.

சூர்யா தயாரிக்க, சரோவ் சண்முகம் இயக்குகிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது: “தமிழ் சினிமாவை பொறுத்தவரை குழந்தைகள் படம் மிக அரிதாகவே தயாரிக்கப்படுகின்றன.

சூர்யாவின் 2டி நிறுவனம் அழகான கருத்துள்ள படங்களையே தயாரித்து வருகிறது. அந்த வகையில், இது குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்கும்.

ஆர்னவ் விஜய்யை திரையுலகுக்கு அறிமுகம் செய்வதில், மகிழ்ச்சி அடைகிறேன். இது, என் மனதுக்கு நெருக்கமான படம். ஒரு சிறுவனுக்கும், அவனது நாய்க்குட்டிக்கும் இடையே உள்ள அழகான உறவை வெளிப்படுத்தும் படமாக இருக்கும்.

மொத்த கதையும் ஊட்டி பின்னணியில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் நடிப்பதற்காக ஆர்னவ் விஜய்க்கு கூத்துப்பட்டறையில், ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டது”. இவ்வாறு அவர் கூறினார்.

Suresh

Recent Posts

Baththa Trailer

Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

15 hours ago

லெனின் பாண்டியன் – திரைவிமர்சனம்

கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…

16 hours ago

நடிகைகளை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை – நடிகை ரோஜா

கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…

17 hours ago

அக்கா மீது ரூ.46 கோடி செக் மோசடி புகார் – விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா!

நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…

17 hours ago

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – கமல்ஹாசன், குஷ்பு கருத்து

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…

17 hours ago

லவ்வர் பாய் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கும் நடிகர் ஜீவன்!

தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…

18 hours ago